கனவு தொழில் 

தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் பலர். ஆனால் அதை நனவாக மாற்ற ஏதேனும் ஒரு வித்தியாசத்தை கொண்டு வந்து வாடிக்கையாளர்களை கவரவேண்டும். நன்றாக படித்து ஒரு நல்ல சம்பளத்தில் நல்லதொரு வேலையே தேடிக்கொள்ள வேண்டும் என்று படிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொல்லக்கேட்டு வளர்ந்த நமக்கு எப்படி தொழில் முனைவோராக வேண்டும் என்பது புதிராகத்தான் உள்ளது.

எப்போது நாம் நமது படிப்பை முடித்து விட்டு நிஜ உலகில் காலடி எடுத்து வைக்கிறோமோ அப்போதுதான் வாழ்கை என்றால் என்ன, ஒரு வேலை வாங்குவது மற்றும் வேலை செய்து பணம் ஈட்டுவது எவ்வளவு கடினமான விஷயம் என்பது புரியவருகிறது. ஆனால் அதற்குள் குறைந்த பட்சம் 21 வருடங்கள் கடந்திருக்கும். இந்த பாடத்தையல்லவா பள்ளி கல்லூரிகள் கற்றுகொடுத்திருக்க வேண்டும். சரி, அப்படிப்பட்ட அனுபவங்களை அடையாத ஆசிரியர்களுக்கு எப்படி புரியும் இப்படியான பாடங்கள்.

ஒரு வேலை கல்லூரிகளிலேயே நாம் அப்படிப்பட்ட அனுபவத்தை அடைந்திருந்தால், படிப்பை முடித்ததும், நிச்சயம் ஏதோ சம்பந்தமில்லாத ஒரு வேலையை தேடி அலைவதற்கு பதிலாக, நமக்கு தெரிந்த தொழிலில் நமது அறிவை பயன்படுத்தி நிச்சயம் தொழில் முனைவோராக சாதித்திருப்போம். ஆனால் தற்போதும் அப்பேற்பட்ட தொழில் முனைவோர்கள் தங்களது அயராத உழைப்பு மற்றும் புதிசாலித்தனத்தினால் சுயமாக முளைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொழில் துவங்க வேறுங்கும் செல்ல தேவை இல்லை. நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாலே போதுமானது. அங்கிருந்தே துவங்கலாம் கோடியில் கொட்டும் தொழிலை. இந்த தலைப்பை துவங்கும் முன் மேற்கூறிய என்னுடைய கருத்துக்களை பகிரவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

இனி நேராக நமது தலைப்பிருக்கு வருவோம்.

டி ஷர்ட் விற்பனை மாதம் 50 லட்சம் - The Fashion Factory

ஒரு சாதாரண டி ஷர்ட் விற்பனை, எப்படி மாதம் தோராயம் 50 லட்சம் வருமானத்தை கொடுக்கிறது? அதில் என்ன ரகசியம் உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் டி ஷர்ட் விற்பனை கொடிகட்டிபறக்கும். இதில் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை புகுத்தினால் நிச்சயம் தனித்துவத்தைக் காட்டலாம்.

திருப்பூரில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த 26 வயதுள்ள சுபைர் ரகுமான், தற்போது இ காமர்ஸ் மூலம் டி ஷர்ட் விற்பனை செய்து வருகிறார்.  The Fashion factory என்கிற இந்நிறுவனத்தின் மாத வருமானம் தற்போது சுமார் 50 லட்சம் தொடும்.

tiruppur zubair rahman

The Fashion Factory விற்பனை ரகசியம்

இவர் அமேசான் தளத்துடன் இணைத்து திருப்பூரில் கொள்முதல் செய்த தனித்துவமான டீ ஷர்ட்களை விற்பனை செய்கிறார். இவரின் விற்பனை முறை தனிதனி டி ஷர்ட் விற்பதற்கு பதிலாக காம்போ முறையில் விற்பனை செய்கிறார். ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு காம்போ முறையில் மொத்தமாக விற்பனை செய்கிறார். அதுவும் தனித்துவமான டி ஷிர்ட்கள். இந்த முறை அதிக கவனம் பெற்றதால் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இவர் குறைந்த விலையில் இணையத்தில் விற்பதால் அதிகமான மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

எப்படி இவ்வளவு பெரிய எண் சாத்தியம்?

ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை ஆர்டர்கள் குவிகிறது. இதன் முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவர் தந்தையின் அனுபவத்துடன், பெரும் சவால்களை கடந்து இன்று மாதம் 50 லட்சம் வருமானம் தரும் நிறுவனத்தின் சொந்தகாரர் ஆனார். மேலும் தனது பிராண்டை அடுத்த நிலைக்கு உலக அளவில் எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

The Fashion Factory - A true story

கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் தெரியுமா?
தமிழ் மட்டும் தெரிந்திருந்தாலே போதும் லட்சத்தில் வருமானமா?
ஒரு டீ கடை ஒரு கோடி லாபம்

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon