How to create 1Cr worth Startup? எப்படி ஒரு கோடி மதிப்புள்ள வணிக நிறுவனத்தை கட்டமைப்பது?
ஒரு வருடத்திலேயே 1 கோடி வருவாய் வரக்கூடிய வணிகத்தை உருவாக்க என்ன வேண்டும் ?
முதலில் இவ்வளவு பெரிய எண் சாத்தியமற்றது எனத்தோன்றும் ? அதனால் சற்று நாம் அந்த எண்களை உடைப்போம்.
1 கோடி ரூபாயில் (மொத்த வருவாயை) பின்வருமாறு எடுத்துக்கொள்ளலாம்.
வாடிக்கையாளரின் எண்ணிக்கை x பொருளின் விலை
10 x ரூ. 10 லட்சம்
100 x ரூ. 1 லட்சம்
1000 x ரூ. 10,000
10000 x ரூ. 1000
100,000 x ரூ. 100
10,00,000 x ரூ. 10
முதலாவது மாதிரின்படி, நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு பொருளை 10 பேருக்கு விற்றால், நீங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். அல்லது மாற்றாக கடைசி மாதிரியின்படி நீங்கள் ரூ.10 மதிப்புள்ள பொருளை 10 லட்சம் பேருக்கு விற்றால் ஒரு கோடி ரூபாய் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
முதல் மாதிரியின் பெயர் B2B நிறுவன மாதிரி. சில அல்லது குறைந்த வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்கிறீர்கள்.
இரண்டாவது B2C மாதிரி. புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.
மேலுள்ள ஆறு மாதிரிகளில் முதல் இரண்டு B2B மாதிரி, மற்றும் கடைசி இரண்டு B2C மாதிரியாகும்.
இப்போது B2C மாதிரியில் வாடிக்கையாளர்களை கவருவதற்கான செலவு, குறிப்பாக இணையம் அல்லது டிஜிட்டல் வழிமுறை விளம்பர மூலம் ஆகும் செலவு அதிகமாககூடும். இதனால் B2C மாதிரி நிறுவனம் பெரும் நிதியைச்சார்ந்து இருக்கவேண்டிய நிலமைக்குத்தள்ளப்படும். முதன்முறையாக தொழில் முனைவோர், அவர்களின் முதல் ஒரு கோடி வணிகத்தை உருவாக்குவதற்கு சிறந்த வழி நடுத்தர இரண்டு மாதிரிகளாகும். இதில்தான் நிதி மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நடுநிலமையாக இருக்கும்.
1000 x ரூ. 10,000
10000 x ரூ. 1000
இது எளிதானது என்று சொல்லவில்லை. ஆனால் இதை சாத்தியமாக்க சரியான வணிக யோசனைகளை சிந்திக்க வேண்டும். இது அதற்கான கட்டமைப்பை உங்களுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்த நடுத்தர வழிமுறையானது மிகவும் வளர்ந்த சந்தைகளில் deadzone என்று அழைக்கப்படுகிறது. இது மேலை நாடுகளின் நிலவும் நிதர்சனம். ஏனென்றால் அவர்கள் பார்வையில் இரண்டு விதமான மக்கள். ஒருவர் நிறைய சம்பாதிக்கிறார்கள் மற்றொருவர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். அவர்கள் நடுத்தர மக்களை கணக்கில் கொள்வதில்லை. ஆனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில், நடுத்தர வழிமுறையே மிகச்சிறந்த பலனை நல்கும்.
ஒருவேளை உங்களுக்கு சந்தேகமென்றால், ஒரு முழு வாரத்திற்கான ரூ.1000 முதல் ரூ.10,000 வரையிலான வணிக பரிமாற்றங்களை உற்றுநோக்குங்கள். அதை செய்வது அதிகமான நடுத்தர வர்க்கம் மக்கள் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
30-40% லாபம் என்பது ஒரு கோடி வணிக நிறுவனத்திற்கான மிகவும் ஆரோக்கியமான ஈட்டல். எனினும் ஒரு வணிக நிறுவனத்தின் 30% லாபம் என்ற ஒரு இலக்கு மிகவும் எளிதானது அல்ல. ஒரு வணிகத்தை கட்டியெழுப்புவது மற்றும் அதைத் தக்கவைத்துக்கொள்ள, மேலும் ஆரோக்கியமான ஈட்டலுக்கு சிறந்த வழி அது நேர்மையான வியாபாரமே!!.
You May Like:
HOW DOES YOUR VOICE MAKE A CHILD GOOD OR BAD?
You May Like:
HOW DOES YOUR VOICE MAKE A CHILD GOOD OR BAD?
Post a Comment