Mangatha Da | Tamil Story

"குப்புசுவாமி உயர்தர சைவ அசைவ உணவகம்" என்ற வண்ண மயமான பலகையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றது அந்த உணவு விடுதி. உள்ளே வேலையாட்கள் அனைவரும் பரப்பாக இயங்கிகொண்டிருந்தனர். ஆர்டர்கள் எடுக்கப்பட்டும், கண்ணைப்பறிக்கும் விதவிதமான உணவுகள் மூக்கைதுளைக்கும் மணத்துடன் பரிமாறப்பட்டும் இருந்தன.


முப்பது வயது மதிக்கத்தக்க வயது, வாட்டசாட்டமான உடம்பு, ஸ்டைலாக வெட்டப்பட்ட தலைமுடி மற்றும் தாடி, ஜீன்ஸ் உடை, காலில் விலையுயர்ந்த சூ மற்றும் பார்பதற்கே கம்பீரமான தோற்றம், அப்படியே ஹோட்டலை நோக்கி நுழைந்தான். கை கழுவிவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒரு டேபிளில் அமர்ந்தான். சிறுது நேரம் மெனு கார்டை பார்த்துவிட்டு அதில் சிலவற்றை அவனுக்கே உரித்தான உச்சரிப்பு நடையில் ஆர்டர் செய்தான். சிறுது நேரத்தில் ஆர்டர் செய்தவைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். முக்கால்வாசி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பல்லுடா என்று ஆர்டர் செய்தான்.

உணவு விடுதியின் வாயிலில் ஒரு காவலர் நுழைந்து, மெதுவாக ஹோட்டலின் அனைத்து மூலை முடுக்குகளையும் நோக்கினார். மெதுவாக அந்த பையனிடம் வந்து "நீதான் கார்த்திக்கா?" என்றார். அவனும் சந்தேகக் குரலில் "ஆமாம். என்ன விஷயம்?" என்றான். உடனே அவர் ஒரு அரை கொடுத்து "ஏண்டா, போலீஸ் காரனுக்கே மீம்ஸ் போட்டு கலாயிக்கிரியா. நட்ரா ஸ்டேசனுக்கு " என்று உரத்த குரலில் அனைவரும் அதிரும் வண்ணம் கத்தினார். அப்படியே சாப்பிடும் கையோடு இழுத்து சென்றார். அதைப்பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. திகைத்துபோய் நின்றுகொண்டிருந்தனர் ஹோட்டல் முதலாளி உட்பட. சிறிது நேரத்தில் அவனை பைக்கில் அமர்த்தி பறந்தோடிப்போனார்.

நெடுந்தூரம் சென்று பைக்கை நிறுத்தி இருவரும் இறங்கினர். இருவரும் சிரித்துகொண்டு உடைகளை மாற்றிகொண்டனர். "நல்ல சாப்பாடு சாப்பிட எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு" என்றபடி மீண்டும் பைக்கில் ஏறி மறைந்தனர்.


மற்ற கதைகள்:



Post a Comment

Previous Post Next Post
Support @Amazon